உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் “கூகுள் ஹோம்”

301

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

நமது குரலின் கட்டளைக்கு ஏற்றவாறு விரைந்து செயலாற்றும் புதிய கருவியான கூகுள் ஹோம் என்ற கணனியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது.

உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் நம் விரல் நுனியில் தெரிந்து கொள்ளலாம், அந்த வகையில் தொழில்நுட்ப கருவிகள் நம் வாழ்வோடு இணைந்து விட்டன.

இந்நிலையில் நமது குரலின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு விரைந்து செயலாற்றும் வகையில் கூகுள் ஹோம் என்ற கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காலையில் நாம் எழுந்தவுடன் என்ன நடக்க வேண்டும், குழந்தைகள் எப்போது எழ வேண்டும், வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன, வகுப்பறையில் என்ன பாடங்கள் நடத்துவார்கள் என்பதில் தொடங்கி அனைத்து புள்ளிவிபரங்களையும் அளிக்கிறது.

அதுமட்டுமின்றி மற்றவர்களுடைய கைபேசிகளுக்கு குறுந்தகவலும் அனுப்பி வைக்கின்றது.

இந்தியரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர் பிச்சை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ’கூகுள் ஹோம்’ கம்ப்யூட்டரை மென்மேலும் தரமுயர்த்தும் ஆய்வுகளில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும் என இதன் அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் இது புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

SHARE