உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கின் நஜ்ப் நகரில் சிக்கி, வெளியேற வழியின்றி தவித்தவர்களில் மேலும் 200 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில், ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த தீவிர முயற்சியின் பயனாக ஈராக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்கள் புது டெல்லி வந்தடைந்தனர்.
ஈராக்கில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை ஈராக் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களின் மூலம் அடுத்தடுத்து அழைத்து வரவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் சுமார் 600 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.