வெடிகுண்டுகளை கண்டறியும் வெட்டுக்கிளிகள்!

265

625.500.560.350.160.300.053.800.748.160.70 (8)

பயிர் பீடைகளான வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பமொன்றை லண்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

ஒருவேளை இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இவை மறைந்துள்ள வெடி பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற தற்போதுள்ள மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட முடியும் என நம்பப்படுகிறது.

இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், வெட்டுக்கிளிகளின் குறிப்பிட்ட மணத்தை அறியும் தன்மையுடன், இலத்திரனியல் சாதனங்களும் இணைந்து இவ் இலக்கை அடைய முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

இங்கு பூச்சியின் செட்டையில் வெப்பம் பிறப்பிக்கும் பச்சையொன்று பொறிக்கப்படுகிறது.

இது வெப்பம் குறைவாக இருக்கையில் பூச்சிகள் பறக்க முடியாமல் போகின்றன.

இதன் மூலம் பூச்சிகளின் இருப்பிடத்தை அறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது வெடிகுண்டுகள் உள்ள இடத்தில் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கணனி மூலம் “yes” அல்லது “no” சமிக்ஞைகளை அனுப்புகின்றது.

இது குறித்தி வெடிகுண்டு அகற்றும் குழுவிற்கு வெடிகுண்டு இருக்குமிடத்து சிவப்பு LED சமிக்ஞையாகவும், வெடிகுண்டுகளற்ற இடங்களாயின் பச்சை LED சமிக்ஞையாகவும் அனுப்பப்படுகிறது.

இங்கு வெட்டுக்கிளிகளின் மோப்பம் பிடிக்கும் திறனை இதனுடன் இணைப்பதற்காகவே உயிருள்ள பூச்சிகளை இங்கு பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் இவை செலவு குறைந்த தொழில்நுட்பங்களாக அறிமுகப்படுத்தப்பட முடியும் எனவும் சொல்லப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (4)

SHARE