எடையை கூட்ட, குறைக்க ரெடி: சனுஷா 

503
படிப்பதற்காக நடிப்பை குறைத்துக் கொண்டார் சனுஷா. பீமா, ரேணிகுண்டா, நந்தி, எத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனுஷா. அவர் கூறியதாவது:தற்போது கேரளாவில் கண்ணூரில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறேன். 2ம் வருட தேர்வுகள் நடந்ததால் சில நாட்கள் படங்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தேன். பட்டப்படிப்பு முடித்தபிறகு எம்பிஏ படிக்க உள்ளேன். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் படிப்பிலிருந்து எனது கவனம் சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறேன். இதற்கு என் பெற்றோர் உதவியாக உள்ளனர். நல்ல வேடங்களுக்காக, நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்துக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஏதோவொரு கதாபாத்திரத்தில் வந்துபோவதைவிட படிப்பதே சிறந்தது என்று அதில் கவனமாக இருக்கிறேன். கதாபாத்திரத்துக்காக உடல் எடை கூடுவது அல்லது மெலிவதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அதுபோல் மாறுவேன். இதற்காக சிறப்பு உணவோ அல்லது உடற்பயிற்சியோ மேற்கொள்வதில்லை. முன்பெல்லாம் எனக்கு சுவீட் என்றால் ரொம்ப பிடிக்கும். இப்போது அது மாறிவிட்டது.

SHARE