மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது.
மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இது தொடர்பாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே அவர்களை லங்காவிவ்ஸ் தொடர்பு கொண்டுகேட்ட போது,1983யூலை மாதம்,கடந்த 31வருடங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்ளால் செய்த மிகவும் அபகீர்த்தியான செயற்பாடு தான் இந்த கறுப்பு ஜூலை.இதன் விளைவாக பாரிய இனவாத,மதவதாதங்களால் மீண்டும்மீண்டும் ,அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்கள் இது தெடர்பான விழிப்புனர்வு மக்களுக்கு அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.