அரச திணைக்களங்களில் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகைக்கு தடை

607

திருகோணமலை மாவட்டத்தில் சில திணைக்களங்களில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் இடமளிக்க உயர் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் -மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கர்களுக்கும் – 2014 ரமழான் பண்டிகை காலத்தில் விசேட விடுமுறை எனும் தலைப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் ஏன் இடையூறு விளைவிக்கின்றனர் என அரச திணைக்களங்களை புலனாய்வு செய்த வேளை திருகோணமலையில் நீதியை நிலைநாட்டும்அலுவலகத்தில் இச் சம்பவம் இடம் பெறுவதை அவதானிக்க முடிந்தது

அரசாங்கம் இனம் மதம் சாதி வேற்றுமை பாராது ஒரு தாய் பெற்ற குழந்தை போல யாருடைய மனங்களையும் புண் படுத்தாது ஒரு சுற்றறிக்கையை வெளியாக்கி அனைத்து மதங்களையும் கௌரவிக்கும் வேளை நீதியை நிலை நாட்டும் திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கட்டளை பிறப்பிப்பது அரச சுற்று நிருபத்தை அவமதிக்கும் செயல் எனவும் தெரியவருகின்றது.

ஜூன் மாதம் 28ம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 29ம் திகதி வரை முஸ்லிம்களின் இவ்விழாக்காலத்தில் முஸ்லிம் அரச அலுவலர்களுக்கும் -பணியாளர்களுக்கும் தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக்கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டும் ஏன் முஸ்லிம் ஊழியர்கள் அவமதிக்கப்படுகின்றனர்.

யாராக இருந்தாலும் சரி எந்த திணைக்களமாக இருந்தாலும் சரி- உயர் பதவியில் இருந்தாலும் சரி மத வழிபாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் எனவும் தமிழ் முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் .வேண்டுகோள் விடுக்கின்றது.

அத்துடன் வெள்ளிக்கிழமை நாட்களில் அலுவலகத்தில் கடமைக்கு பணியாளர்கள் இல்லை என கூறி மத வழிபாடுகளை நிலை நாட்ட தடை விதிப்பது தன்னை தானே முட்டாளாக்கிக் கொள்ளும் செயல் எனவும் கருதப்படுகின்றது.
எந்த மதமாக இருந்தாலும் மத வழிபாட்டுக்கு முன்னுரிமை வழங்க உயர் பதவியில் உள்ளவர்கள் இடமளிக்க வேண்டும். குறிப்பாக நோன்பு காலத்தில் தொழுகைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் நாளாந்தம் பின்வரும் நேர
அட்டவனையை அரச நிர்வாக திணைக்களம் வெளியிட்டுள்ளது.

முற்பகல் 03.30 முதல் முற்பகல் 06.00 வரை

பிற்பகல் 03.15 முதல் பிற்பகல்04.15 வரை

பிற்பகல்06.00 முதல் பிற்பகல் 07.00 வரை

பிற்பகல் 07.30 முதல் பிற்பகல் 10.30 வரை சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேளை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரமழான் பெருநாளில் இருதித்திகதிக்கு 14 நாட்களுக்குமுன்னதாக முற்பணம் வழங்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனவே முஸ்லிம் தமிழ் சிங்களம் என வேற்றுமை பாராது மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்க அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உயர் மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.

SHARE