போதை மருந்துக்கு அடிமையாய் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்! இன்னும் பல சுவாரசிய தகவல்களுடன்

262

625.400.560.350.160.300.053.800.748.160.70 (1)

ஸ்டீவ் ஜாப்ஸ், அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்தின் ஒரு சிறந்த தொழில் அதிபரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். அவருடைய அடையாளமும் அபார சாதனையும் கணணி தான் என்றால் அது மிகை அல்ல.

’கல்லறைக்கு செல்லும்போது ஒரு பணக்காரன் என்று பெயர் சூட்டிக்கொள்வதில் இல்லை என் பிரச்சினை. தினமும் படுக்கையறைக்கு செல்லும்போது, இன்று என்ன அற்புதம் செய்தோம் என்ற கேள்விக்கு விடைதேடுவதுதான் எனது பிரச்சினை’ என்று கூறும் ஜாப்ஸ், தினசரி இலக்கு வைத்து தேடி உழைத்தவர்.

இதன் விளைவாக இவர் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர், தலைவர், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என அதன் முழு சக்தி தளமாக விளங்கினார்.

மேலும் பிக்ஸர் அனிமேசன் ஸ்டுடியோவின் முதன்மை முதலீட்டாளராக, தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்ந்தார். அடுத்து ’நெக்ஸ்ட்’ நிறுவனத்தின் உருவாக்கி, தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சிறந்த பணிசெய்து, தரமான படைப்புகளை தந்தார்.

வால்ட் டிஸ்னி நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

ஸ்டீவென் பால் ஜாப்ஸ் என்ற முழுப்பெயர் கொண்ட இவர், பிப்ரவரி 24,1955 ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் பிறந்தார்.

1960 களில் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஹோம்ஸ்டெட் உயர்நிலைப் பள்ளியில் ஒரு சீனியர் மாணவராக சேர்ந்தார். 1972 ல் ரீட் கல்லூரியில் குறைவான நாட்களே சென்று சுருங்கவே கல்வி பயின்றார்.

அப்போதைய அவருடைய நெருங்கிய இரண்டு நண்பர்கள் என்றால், மூத்த பொறியியலர் ஒருவர், மற்றொருவர் அவருடைய காதலி.

இவர் தனது கல்லூரி நாட்களில் மாரிஜூனா, எல்.எஸ்.டி. உட்பட சட்டவிரோதமான போதைப் பொருள்களை பயன்படுத்தியுள்ளார்.

மேலும், ’இரண்டு அல்லது மூன்றில் ஒரு பங்கு முக்கியமான விஷயங்களை நான் எல்.எஸ்.டி. பயன்படுத்திய நிலையில்தான் கொடுத்தேன்’ என ஒரு பேட்டியிலும் கூறியுள்ளார்.

ஜாப்ஸின் இந்த கருத்தில் இருவேறு பார்வை உள்ளது. போதைப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த கருத்தை உதாசினப்படுத்தலாம்., போதைப் பழக்கம் உள்ளவர்கள் இதை முன்னுதாரணப்படுத்தலாம்.

1974 ல் ஒரு ஞானத் தேடலாக இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்து ஜென் புத்தமதத்தை பயின்றார். அதன்பிறகு, அவருடைய மனநிலையில் ஒரு மாறுதலை உணர்ந்தார்.

1976 ல் வோஸ்னியாக்ஸ் ஆப்பிள் 1 என்ற தனிப்பட்ட கணணி விற்பனையை இணை நிறுவனராக தொடங்கினார். வெற்றிகரமான விற்பனையால் அடுத்த ஒரு வருடத்திலே வந்த, ஆப்பிள் 2 கணினியும் விற்பனையில் சூடுபிடித்தது.

அடுத்தடுத்து கணணியில் கூடுதல் சிறப்புகளை சேர்த்து, விற்பனை நுணுக்கங்களால் பெரு வெற்றி கண்டனர்.

ஆனாலும், நீண்ட ஒரு அதிகார போராட்டத்தின் காரணமாக, ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து பலவந்தமாக 1985 ல் வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய ஜாப்ஸ் சில உறுப்பினர்களைக் கொண்டு ’நெக்ஸ்ட்’ என்ற புதிய நிறுவனத்தை ஆரம்பித்தார். பிக்ஸர் என்ற புதிய சினிமா நிறுவனத்தையும் தொடங்கி ‘டாய் ஸ்டோரி’ என்ற முதல் கணணி அனிமேஷன் படத்தை எடுத்தார்.

1997 ல் ஆப்பிள், நெக்ஸ்ட்டை விலைக்கு வாங்கியது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாப்ஸையே மீண்டும் அமர்த்தியது.

இவர் 1991 ல் லாரின் பவெல் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.இவர்களுக்கு ரீட் ஜோப்ஸ், எரின் ஜோப்ஸ், ஈவ் ஜோப்ஸ் என மூன்று பிள்ளைகள் உள்ளன. மேலும், அவருடைய முதல் துணைவியாரான க்ரிஸன் ப்ரென்னனுடன் இவருக்கு லிஸா ப்ரென்னன் என்ற மகள் 1978 ல் பிறந்தார்.

போதைப்பொருள் உட்பட்ட சில தீய பழக்கங்களால் ஜாப்சுக்கு பாங்கிரியாஸில் புற்றுநோய் ஏற்பட்டு, முச்சுத்திணறல் காரணமாக அக்டோபர் 5, 2011 ல் தனது 56 வது வயதிலே காலமானார்.

’உருவாக்கும் பொருள்கள் தரத்தின் அளவுகோலாக அமைய வேண்டும். எதிர்பார்த்த சிறப்புகள் இல்லாத சூழலில், சிலர் அந்த பொருளை பயன்படுத்துவது இல்லை.’ போன்ற உற்பத்தி துறைகளுக்கு உபயோகமான அனுபவ வார்த்தைகளையும் பகர்ந்தார்.

SHARE