உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும்.
மிக முக்கியமான இந்த அரை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியின் கேப்டனும், முன்னணி ஸ்டிரைக்கருமான ராபின் வான் பெர்சி விளையாடுவது சந்தேகம் என செய்தி வந்துள்ளது.
வான் பெர்சிக்கு வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினை உள்ளது. அதனால் வான் பெர்சி அரை இறுதிப்போட்டியில் ஆடுவது சந்தேகம் என்று நெதர்லாந்து பயிற்சியாளர் கூறியுள்ளார்.
மேலும், ‘‘அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சியை விளையாட வற்புறுத்தமாட்டோம். அவர் விளையாடுவாரா என்பது குறித்து இன்று முடிவு எடுப்பேன். அவர் நெதர்லாந்து அணியின் மிகவும் முக்கியமான வீரர்.
இந்த ஒரு நாளை (அரை இறுதி)க்கு அவரை பயன்படுத்த நினைக்கமாட்டோம். அவர் எங்களுக்கு தேவை’’ என்றார்.
அரை இறுதியில் ராபின் பெர்சி விளையாடாவிட்டால் அது நெதர்லாந்து அணிக்கு பெறும் பின்னடைவாக இருக்கும்.