நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு

514
நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பட்லர், நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என்ற 32 வயதே ஆன பட்லர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு கவலைதான் என்றாலும், உணர்ச்சிபூர்வமான நேரம். அடுத்து குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவேன் என்று நம்புகிறேன் என்றார்.

பட்லர் தனது 20 வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2002-ம் ஆண்டு அறிமுகமானார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது முதுகு வலி ஏற்பட்டது. அதன்பிறகு இவரால் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை. பின்னர், 2008-09-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாடினார்.

SHARE