11 நாட்கள் காட்டில் தவித்த சிறுமி… நாயின் உதவியுடன் மீட்பு!…

395

சைபீரியாவில் 11 நாட்களுக்கு பிறகு காணாமல் போன சிறுமியை அவரது நாயின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

சைபிரியாவை சேர்ந்த கரினா என்ற 4 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது தந்தையை தேடி அவரது நாயுடன் சென்றுள்ளார். ஆனால் அப்பகுதியில் புல்வெளிகள் மிகவும் உயரமாக இருந்ததால் அச்சிறுமி வழிமாறி சென்றுவிட்டார். அவளால் திரும்ப தனது குடியிருப்பு பகுதிக்கு திரும்ப இயலவில்லை. அவரது வீட்டில் இருந்து சுமார் 4 மைல் தொலைவில் அவர் காணாமல் போனார்.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சிறுமி காணாமல் தொலைந்து பல நாட்கள் ஆகியும் அவளை கண்டுபிடிக்க இயலாததால் அனைவரும் நம்பிக்கை இழந்து இருந்தனர்.

அவ்வேளையில் சிறுமியுடன் சென்ற நாய் மட்டும் 9 நாட்கள் கழித்து வீடு திரும்பியது. ஆனால் அந்த நாய் சிறுமி இல்லாமல் தனியே வந்தது. இதனால் அனைவரும் தங்களது நம்பிக்கையை இழந்தனர். பின்பு அந்த நாயின் உதவியுடன் அந்த சிறுமியை தேட ஆரம்பித்தனர். சுமார் 11 நாட்களுக்கு பிறகு அந்த சிறுமியை நாயின் உதவியுடன் மீட்டனர்.

அந்த சிறுமி 11 நாட்கள் தனியாக அவதிப்பட்டுள்ளார். நாய் இல்லாமல் அந்த சிறுமி அங்கு உயிர் வாழ்த்து இருக்க சாத்தியமே இல்லை என்கின்றனர்.

– See more at: http://www.manithan.com/news/20160727120881#sthash.rY1IuW5d.dpuf

SHARE