நிலாவிற்கு சென்று வந்த மூவர் ஒரே நோயால் உயிரிழப்பு!

296

625.117.560.350.160.300.053.800.210.160.90

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்தில், நிலாவில் காலடி எடுத்து வைத்து உலக மக்களை உறைய வைத்தனர் அமெரிக்கர்கள்.

1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு பயணமானார்கள்.

இவர்களை தொடர்ந்து வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நபர்கள் நிலாவுக்கு சென்று வந்தனர். இவ்வாறு நிலாவுக்கு சென்று கால் பதித்தவர்களில் மூன்று பேர் ஒரே வகையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் நீல் ஆம்ஸ்ட்ராங் இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நிலையில் 2012ஆம் ஆண்டு தனது 82வது வயதில் உயிரிழந்தார்.

1972ஆம் ஆண்டு அப்பலோ- 15 விண்கலத்தில் ஜேம்ஸ் இர்வின் என்பவர் நிலாவுக்கு சென்று வந்தார். இவர் நிலாவுக்கு சென்று வந்த இரண்டாவது வருடத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவருக்கு இதய துடிப்பில் சிக்கல் இருந்து வந்துள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு அவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அப்பலோ- 17 விண்கலத்தில் நிலாவுக்கு சென்று வந்த ரொனால்டு ரான் நெஞ்சு வலி காரணமாக தனது 56வது வயதில் உயிரிழந்தார்.

இவ்வாறு நிலாவிற்கு சென்றவர்களில் மூன்று பேர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

எனினும், அவர்களின் நோய்க்கும் நிலாவிற்கு சென்று வந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆய்வு ஒன்றில் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரை நிலாவிற்கு மொத்தம் 24 பேர் விண்கலம் மூலம் சென்று கால்பதித்துள்ளனர். அதில் 7 பேர் இந்த ஆய்வின் போது உயிரிழந்து இருந்தனர்.

எவ்வாறாயினும், நிலாவிற்கு விண்கலம் மூலம் சென்று வந்த இந்த மூன்று பேரும் இதயக் கோளாரு காரணமாக உயிரிழந்துள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE