விண்வெளி கழிவுகள்

582

பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 5 லட்சம் கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட்ட மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும். 1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று உருசியாவால் கைவிடப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது. 2007 ஆம் ஆண்டில் சீனா தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக ஏவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் 1.50லட்சம் சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது.

SHARE