ஒரே படத்தில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்!

771

இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் 27 ஆண்டு கால பகையை மறந்து அண்மையில் ரிலீஸான குலாபி கேங் படத்தில் நடித்தனர் .

இப்போது 20 ஆண்டு கால  பகையை மறந்து ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர்.

1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்திய அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியானார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுஷ்மிதா. ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்றார். ஆனாலும், இவர்களுக்குள் மோதல் தொடர்ந்தது.

அழகி பட்டம் வென்ற பிறகு ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சினிமாவுக்கு வந்தனர். ஆனால் , சுஷ்மிதாவால் ஐஸ் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை.

குழந்தை பெற்ற பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் ‘ஹேப்பி ஆனிவர்சரி’ படம் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி ஆகிறார்.இதில் சுஷ்மிதா சென்னும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  20 ஆண்டு பகையை மறந்து இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.

 

SHARE