கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது.
துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீ பிடித்ததில் அதன் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டது.
கடினமான நிலையிலே விமானம் தரையிறங்கியது, தரையிறங்கியதும் விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது என்று விமானத்தில் இருந்தவர் கூறினார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
விமானம் மோதியது என்றதும் அதிகாரிகள் சுதாரித்து பயணிகளை வெறியேற்றினர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியும் தொடங்கியது என்று துபாய் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.