அப்பிள் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள iPhone 7 தொடரிலான கைப்பேசிகள் வெளியாகுவதற்கு இன்னும் ஒரு மாதங்களே இருக்கின்றன.
இந் நிலையில் இவை அனைத்து கைப்பேசி பிரியர்களினதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் நாளுக்கு நாள் அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது பிரதான நினைவகத்தின் அளவு (RAM) 3GB ஆக இருக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்களில் 2GB கொள்ளளவுடைய பிரதான நினைவகமே உச்ச பட்சமாக காணப்பட்டது.
இதன் மூலம் குறித்த கைப்பேசிகள் சிறந்த செயற்பாட்டு வினைத்திறனைக் கொண்டனவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் பிரதான நிகைவமானது 6GB வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.