கிசுகிசு எழுதும் வித்யா பாலன் ஹீரோயின்கள் ஓட்டம் 

454



கிசுகிசு எழுத தனியாக இணைய தள பக்கம் தொடங்கினார் வித்யா பாலன். அவரை கண்டதும்  ஹீரோயின்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். பாலிவுட்டில் நடிகைகளைப்பற்றி கிசுகிசு எழுதிய காலம் மலையேறும் சூழல் வந்திருக்கிறது. அதிரடியாக நடிகை ஒருவரே பாலிவுட் ஸ்டார்களை பற்றி கிசுகிசு எழுத முடிவு செய்திருக்கிறார். டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் வித்யாபாலன்தான் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.

 

இதற்காக பாபி கே சாப் மாலும் ஹை என ஸ்பெஷல் இணைய தள பக்கத்தை தொடங்கி இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் பலருடன் இவருக்கு நட்பு இருக்கிறது. இதனால் பல முக்கிய தகவல்கள் இவரது காதுக்கு வருகிறது. இதுவரை இந்த தகவல்களை மனதில் போட்டு பூட்டி வைத்திருந்தார். இப்போது அதை அம்பலத்துக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார். இதுதவிர கிசுகிசுக்களும் எழுத முடிவு செய்திருக்கிறார். இதற்காக சீக்ரெட் குழு ஒன்றையும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

 

அவர்கள் சொல்லும் கிசுகிசுக்களையும் இந்த பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த உள்ளாராம். இதன்விளைவாக இத்தனை நாள் மனம்விட்டுவித்யாவிடம் பேசிய சில டாப் ஹீரோயின்கள் இனி தங்களது அந்தரங்க விஷயங்களை அவரிடம் சொல்வதில்லை என்று முடிவு செய்திருப்பதுடன் அவரை கண்டாலே விழுந்தடித்து ஓடிவிடுகிறார்களாம். இதுபற்றி வித்யாபாலனின் மேனேஜரிடம் கேட்டபோது, வித்யாபாலன் இணைய தள பக்கத்தை தொடங்கி இருப்பது உண்மைதான். இதன் மூலம் பெரிய மற்றும் சிறந்த தகவல்களை அவரால் முதல் நபராக சொல்ல முடியும் என்றார்

 

SHARE