தங்க ஷூ விருது யாருக்கு?

521
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (கோல்டன் பூட்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான தங்க ஷூ–வை வெல்வது யார்? என்பதில் 6 கோல்கள் அடித்த கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், 5 கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆகியோர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் ஒரு கோல் அடித்தால் 6 கோலை எட்டுவார். அப்போது இருவருக்கும் இடையேயான கோல் எண்ணிக்கை சமநிலையை எட்டும். இருவர் இடையே சம நிலை ஏற்படும் போது கோல் அடிக்க யார் அதிகம் உதவி இருக்கிறார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அப்படி பார்த்தால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2 முறை கோல் அடிக்க உதவி இருக்கிறார். தாமஸ் முல்லர் 3 தடவை கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். கோல் சமநிலை ஏற்பட்டால் தாமஸ் முல்லருக்கு தான் தங்க ஷூ கிடைக்கும்.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் கோல் அடிக்காவிட்டால், ரோட்ரிக்ஸ் தங்க ஷூவை தன்வசப்படுத்தி விடுவார். அர்ஜென்டினா அணி வீரர் லயோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்தால் மட்டுமே தங்க ஷூவை பற்றி நினைக்க  முடியும்.

SHARE