நுவரெலியாவில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது யாரும் அறிந்த விடயம். அங்கு காத்திருந்த குடும்பத்தாரின் அவலக்குரல் யாரும் அறிந்திடாத ஒன்று.
நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை கைக்குழந்தைகளுடன் நீதிமன்ற வாசலில் காத்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் உறவினர்கள் தவித்தார்கள்.
குறித்த எழுவரில், சகோதரர்கள் ஒருவருக்குக் கூட ஆண் வாரிசுகள் இல்லை என்பதும், சுப்பிரணியம் விக்னேஸ்வரன் என்பவருக்கு மட்டுமே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
‘இவர்கள் இந்த கொலையை செய்யவில்லை, இவர்களை விடுதலை செய்யுங்கள்” என உறவினர்கள் கோரிக்கைக்களை விடுத்துள்ளனர்.