போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

510
திடீரென செல்வந்தர்களாக மாறிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
cocaine_002 download (1)

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் 10, 15 மற்றும் 50 லட்ச ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

TPN NEWS

SHARE