கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புலனற்றோரின் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி!

445

கண் பார்வை அற்றோர் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுத்துள்ளனர்.

ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது. விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி இன்று பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் இணைப்பில் உரிமை நிறுவனம் நடத்தும் தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016ஆம் ஆண்டின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

30 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சத்தப்பந்து கிரிக்கெட் போட்டியில் வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணி துடுப்பாட்டத்தினை தீர்மானித்து 30 பந்துப் பரிமாற்றங்களினை எதிர்கொண்டு, ஏழு விக்கற் இழப்பிற்கு 267 ஓட்டங்களை பெற்றனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணியினர் 27 பந்துப் பரிமாற்றத்தின் இறுதியில், ஒன்பது விக்கற் இழப்பிற்கு 268 ஒட்டங்களை பெற்று வெற்றியினைத் தமதாக்கிக் கொண்டனர்.

அடுத்த நிகழ்வாக எதிர்வரும் 20ஆம் திகதி சக்கர நாட்காலி கூடைப்பந்தாட்டப் போட்டிகள் வவுனியாவில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பில் எதிர்வரும் 28ஆம் திகதியும், வவுனியாவில் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE