அரசாங்கத்தினால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது- பிரான்ஸ்

499

இலங்கையில் நல்லிணக்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா (துநயn-Pயரட ஆழnஉhயர) தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் நண்பர்கள் என்ற ரீதியில் நல்லிணக்கம் குறித்து பிரான்ஸூம், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீளவும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்க வேண்டுமாயின் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மையினர், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் ஒத்துழைப்புடனேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன மற்றும் மதங்களுக்கும் மரியாதை அளித்து, மூன்று மொழிகளையும் கற்பிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் பிரான்ஸ் பங்களிப்புச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE