தொடக்க வீரர்களாக பீட்டர்சன்- எல்கார் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ளையாடினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 11.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அந்த அணி 70 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பீட்டர்சன் 46 பந்தில் 34 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து டு பிளேசிஸ் களம் இறங்கினார். எல்கார்- டு பிளேசிஸ் ஜோடி இலங்கை அணியின் பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. சிறப்பாக விளையாடிய எல்கார் சதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 195 ரன்னாக இருக்கும்போது எல்கார் 103 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
டு பிளேசிஸ் 80 ரன்னில் அவுட் ஆனார். அப்போது தென்ஆப்பிரிக்கா அணி 220 ரன் எடுத்திருந்தது.
அடுத்து வந்த அம்லா 11 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் டி காக், ஸ்டெய்ன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் முதல் நாள் ஆட்ட முடிவு வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 268 ரன் எடுத்துள்ளது. டி காக் 17 ரன்னுடனும், ஸ்டெய்ன் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.