பிரதமர் மோடியின் ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம்

478
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ப்ரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் டேவிட் கேமரூன் புலம்பெயர் இந்திய சாதனையாளரான ப்ரீத்தி படேலை அமைச்சராக நியமித்துள்ளார்.

எசக்ஸ் கவுண்டியிலிருந்து 2010 ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் தற்போது தான் அவருக்கான முக்கிய பணியை கேமரூன் ஒதுக்கியுள்ளார். சிறு வியாபாரம், போக்குவரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகள், மலிவு விலை வீடுகள் போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருந்த போது ஹேகில் உள்ள ஊடக நிறுவனத்தில் பணியாற்றிய ப்ரீத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து கட்சி சிறு கடை குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ப்ரீத்தியின் தாய் தந்தையர் நார்போல்க் நகரில் உள்ளூர் தபால் நிலையத்தை நடத்தி வருகின்றனர். 2010ல் நடந்த தேர்தலில் ஆசியாவை சேர்ந்த முதல் பெண்மணியாக இவர் வெற்றி பெற்றார். கடந்த மாதம் இந்தியா வந்த பிரிட்டன் குழுவினருடன் ப்ரீத்தியும் வந்ததுடன் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

SHARE