சோலோ பாடல் இல்லை ஹீரோயின் சோகம் 

497




சோலோ பாடல் இல்லாததால் சோகமானார் ஹீரோயின் உதயதாரா. தீ நகர், கண்ணும் கண்ணும், மலையன் போன்ற படங்களில் நடித்த உதயதாரா, நடிக்கும் புதிய படம் பிரம்மபுத்திரா. இது பற்றி பட இயக்குனர் தாமஸ் கூறும்போது, இப்படத்தின் கதை கேட்ட உதயதாரா தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க சம்மதித்தார். பட ஷூட்டிங் நேரத்தில் அவர் சோகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. ஹீரோயினாக நடிக்கும் தனக்கு படத்தில் சோலோ பாடல் இல்லையே என்று வருத்தப்பட்டாராம். இது என் கவனத்துக்கு வந்தது.

கதையின் சூழலில் ஹீரோயின் சோலோ பாடல் ஒன்று வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தவேளையில் அவரது வருத்தத்தையும் கேள்விப்பட்டபிறகு தனிபாடல் ஒன்று அமைக்கப்பட்டது. சஸ்பென்சாக அவரிடம் அதை கூறியபோது சந்தோஷம் பொங்க அதில் நடித்தார்.

இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு காட்டியதும் அதிகாரிகள் பாராட்டியதுடன் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினர். இதில் முரளி, தினேஷ்பாபு, கங்கேஷ், அக்ஷதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுனில் சேவியர் இசை. கோல்டன் மீடியா, நிலா எண்டர்பிரைசஸ் தயாரிக்கிறது என்றார்.

 

SHARE