டைரக்டர் ஆகிறார் நித்யா மேனன் 

473




நடிகை நித்யா மேனன் டைரக்டர் ஆக முடிவு செய்துள்ளார். 180, மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்திருப்பதுடன் அப்பாவின் மீசை, முனி பார்ட் 3 படங்களிலும் நடித்து வருபவர் நித்யா மேனன். தயாரிப்பாளர்களுடன் மோதிக்கொண்டது உள்பட அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்படுபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழியில் நடித்து வருகிறார். பெரும்பாலான ஹீரோயின்கள் தான் நடித்த கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேச அழைத்தால் எஸ்ஸாகி விடுவார்கள்.

ஆனால் எந்த மொழி படத்தில் நடித்தாலும் தனது கதாபாத்திரத்துக்கு தானே டப்பிங் பேசுவதில் கவனமாக இருப்பார் நித்யமேனன். பாட்டு பாட வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்று பாடி வருகிறார். தற்போது நித்யாவுக்கு புதுயோசனை உதித்திருக்கிறது. விரைவில் கதை எழுதி அதை இயக்க முடிவு செய்துள்ளார். அதுவும் தமிழ், தெலுங்கு, பெங்காலி என 3 மொழிகளில் இயக்க எண்ணி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் பெண் இயக்குனர் ஸ்ரீபிரியா இயக்கத்தில் 22 மாலினி பாளையங்கோட்டை என்ற படத்தில் நடித்தபோதும் பிற இயக்குனர்கள் படங்களில நடித்தபோதும் அவர்கள் பணிகளை பார்த்து இவரது மனதிலும் இயக்குனர் ஆசை முளைவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது

 

SHARE