புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட OnePlus One ஸ்மார்ட் கைப்பேசியின் தொடுதிரையில் கோளாறுகள் காணப்படுவதாக பயனர்கள் முறையீடு செய்துள்ளனர்.அதாவது தொடுதிரையின் கீழ்ப் பகுதியில் மஞ்சள் போன்ற இலேசான நிறம் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இதுவரையில் இந்த ஸ்மார்ட் கைப்பேசியினை தயாரித்த நிறுவனம் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், இதற்கான தீர்வு விரைவில் முன்வைக்கப்படும் என தொடர்ந்தும் பயனர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
|