எதுவும் முழுமையாக கற்றோர் இல்லை எனலாம், சிறிய விஷயமானாலும் அவைகளில் தெரியாத அம்சங்கள் ஒன்றேனும் இருக்க தான் செய்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
வாட்ஸ்ஆப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..
இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனினை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
நீங்கள் கடைசியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ்ஆப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த செட்டிங்ஸ் — அக்கவுன்டு — ப்ரைவஸி — லாஸ்ட் சீன் ஆப்ஷனை க்ளிக் செய்து நோபடி என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் மெனு பட்டனை க்ளிக் செய்து ம்யூட் பட்டனை தேர்வு செய்து ம்யூட் செய்ய வேண்டிய க்ரூப் பெயரை க்ளிக் செய்யலாம்.
சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும். ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க செட்டிங்ஸ் — சாட் செட்டிங்ஸ் — மீடியா ஆட்டோ டவுன்லோடு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.
வாட்ஸஆப் சாட்களை பேக்கப் செய்ய செட்டிங்ஸ் — சாட் செட்டிங்ஸ் — பேக்கப் கான்வர்சேஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.
நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும், ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
வாட்ஸ் புகைப்படங்களை கேலரி அல்லது கேமரா ரோலில் வைத்து கொள்வது சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவ்வாறானவர்கள் புகைப்படங்களை வாட்ஸ்ஆப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.