காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு ஆலொசனை வழங்க மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
வெளிநாட்டு நிபுணத்துவ ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த விசரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ கருதுவதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் ஆலொசனைகள், அனுபவங்கள் வழிகாட்டல்கள் அவசியமாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேர் டெஸ்மன்ட் டி சில்வா (தலைவர்), சேர் ஜிப்nரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
காலத்திற்கு காலம் நிபுணத்துவ ஆலொசனைகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்மன் மற்றும் ஜிப்ரி ஆகியோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தீர்ப்புக்களில் முக்கிய பங்கினை வழங்கியிருக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.