வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று (17.7.14) நாட்டிவைக்கப்பட்டது.
வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகள், வவுனியா சட்டத்திரணிகள் சங்க தலைவர் க. தயாபரன், ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
காலை 10 மணிக்கு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக இருந்து கலாசார மற்றும் இன்னியங்கள் முழங்க அழைத்து செல்லப்பட்ட பிரதம நீதியரசரால் ஞாபகார்த்தமாக மரக்கன்று ஒன்றும் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் நீதமன்ற கோவை அறையினையும் பிரதம நீதுpயரசர் பார்வையிட்டிருந்தார்.