சிவில் பாதுகாப்பு படையணி மத்திய நிலையம் கோத்தபாயவினால் திறந்து வைப்பு!-மணலாறு

486

மணலாறு  பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையணியின் மத்திய நிலையத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

யுத்த காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மணலாறு (வெலிஒயா) பிரதேச மீனவர் நலன்புரி நிலையம் பனேரமைக்கப்பட்டே இந்த மத்திய நியைம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டளை அதிகாரிக்கான உத்தியோகபூர்வ இல்லம், பொது நல வர்த்தக நிலையம், மகளிருக்கான இல்லங்கள், கேட்போர் கூடங்கள் மற்றும் பௌத்த வணக்கஸ்தலங்கள் என்பனவற்றை உள்ளடக்கி இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்துக்கு சிவில் பாதுகாப்பு படையணியின் பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

SHARE