இணையத்தை பயன்படுத்தும் அனைவரின் கவனத்திற்கு!…

268

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்திற்கெல்லாம் சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட கணனியை பயன்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்த்து பாதுகாப்பான இணைய உலாவலை மேற்கொள்ள, அதாவது நாம் இணையத்தினை பயன்படுத்தும் போது எமது எவ்வித நடவடிக்கைகளையும் சேமிக்காமல் இணையத்தினை உலாவருவதற்கு ஏராளமான இணைய உலாவிகள் தன்னகத்தே வசதிகளை கொண்டுள்ளது.

அந்த வகையில் மிகவும் பிரதான இணைய உலாவிகளான Google Chrome, மற்றும் Mozilla Firefox போன்றவைகளும் இந்த வசதியினை தன்னகத்தே கொண்டுள்ளது. இது Google Chrome இணைய உலாவியில் “incognito” Mode எனவும் Mozilla Firefox இல் “Private” Mode எனவும் அழைக்கப்படுகின்றது.

எனவே நீங்கள் இதனை Google Chrome இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள Google Chrome இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Customize and control எனும் Menu இனை சுட்டி New incognito window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

இனி தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் இணைய உலாவலை மேற்கொள்ளுங்கள். இதில் உங்கள் எவ்வித இணைய நடவடிக்கைகளும் சேமிக்கப்பட மாட்டாது.

இதனை Mozilla Firefox இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் இடது மூலையில் தரப்பட்டிருக்கும் Firefox Menu ஐ சுட்டி New Private Window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

நீங்கள் இணையத்தினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும் உங்கள் வங்கிக் கணக்குகளை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் போதும் மேற்கூறிய முறையை பின்பற்றுங்கள். அதுவே மிகவும் பாதுகாப்பானது.

இணையத்தளங்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவே இருங்கள்.. உங்களை குறிப்பிட்ட குழுவினர் ஏமாற்றவதற்காக அவதானித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறக்க வேண்டாம்..

 

SHARE