முன்னாள் போராளிகளும்,சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விஷ ஊசியும்

359

2009ஆம் ஆண்டோடு நிறைவடைந்த யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் 11000இற்கும் மேற்பட்ட போராளிகள் இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. யுத்தம் நிறைவடைந்து 07வருடங்களைக் கடக்கவுள்ள இந்நிலையில் இம்முன்னாள் போராளிகள் ஒவ்வொருவராக இறப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளது போராட்டமானது மனவுறுதி நிறைந்ததான வலிமைமிக்கது. ஆயிரம் துருப்புக்களை இராணுவ நடவடிக்கைக்காக நகர்த்துகின்றபோது வெறுமனே 100போரா ளிகளே சண்டையை நிறைவுசெய்துவிட்டு பாசறைக்குத் திரும்புவார்கள். இதற்குக் காரணம் தேசியத்தலைவர் பிரபாகரன் உளவியல் ரீதியாக அவர்களை வலிமைமிக்கவர்களாக வழிநடத்திவந்தமையேயாகும்.

ltte-20140430-1

போராளிகளின் மன உறுதிகளி னால் பல்வேறான சமர்க்களங்களில் அவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. எனினும் சரணடைந்த போராளிகளுக்கு எவ்வாறு இந்தப் புற்றுநோய் வந்தது என்பது சந்தேகத்திற்குரிய விடயம்தான். இதனது உண்மைத்தன்மை மிக முக்கியமாக ஆராயப்படவேண்டியதொன்று. இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடானது, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தப்பட்டே இறந்துபோவதாக பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரக்கக்கூறினார். அவரைத்தொடர்ந்து த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்விடயம் தொடர்பிலான கருத்துக்களைக் கூறினர். ஊடகங்களில் இவ்விடயம் தொடர்பான செய்திகள் பலவாறாக வெளிவருகின்றன. இது அரசாங்கத்தின் மத்தியிலும் குழப்ப நிலை களை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத சிங்கள அரசு விஷ ஊசி பயன்படுத்தப்பட்டு போராளிகள் இறந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்களா? அது மட்டுமல்லாது சரணடைந்த போராளிகளையும், தளபதி களையும் சித்ரவதை செய்து கொலை செய்த காணொளிகள் ஆதாரங்களாகவிருக்க, அதனைப்பார்த்த ஐ.நாசபை கூட இனப்படுகொலை இல்லை இதுவொரு போர்க்குற்றமே என்கிற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விஷ ஊசியினைப் பயன்படுத்துவதென்பது இனப்படுகொ லைதான். ஈராக்கில் சதாம் ஹூசைன் அவர்கள். 120 குர்தீஸ் இன இராணுவ வீரர்களுக்கு விஷ ஊசியி னைப் பயன்படுத்திக் கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டனை அமெரிக்க அரசினால் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் 14,000இற்கும் மேற்பட்ட மக்கள் விஷ வாயுவின் மூலம் கொல்லப்பட்டார்கள் என அறிந்த அமெரிக்காவும் கண்மூடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக நடேசன், புலித்தேவன், இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்ற இன்னும் பல நூறு போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், துப்பாக்கியின் மூலமாக சுடப்படுவதும் காணொளிகளாகப் பதிவாகியுள்ளது. இவை போர்க்குற்றமா? அல்லது திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தொழித்த இனப்படுகொலையா?

நிலைமைகள் இவ்வாறிருக்க புனர்வாழ்வளிக்கப்பட்ட 11000 பேராளிகளுக்கும் விஷ ஊசி பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபித்துக்காட்டவேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. இதனை இவர்கள் நிறைவேற்றத்தவறி இதனது உண்மைத்தன்மை என்னவென்று உலகறியச் செய்யாவிட்டால் எமது அடுத்த சந்ததியினர் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உருவாவது மட்டுமல்லாது த.தே.கூட்டமைப்பினரால் சர்வதேச மட்டத்திற்குக் கூறப்படும் அனைத்தும் பொய்யாகிப்போகும். இங்கு 11000 போராளிகளுக்கும் விஷ ஊசி பயன்படுத்தப்பட்டிருந்தால் எங்கிருந்து அது கொண்டுவரப்பட்டது? இதற்கு யார் உடந்தையாகவிருந்தார்கள்? எவ்வகையான ஊசிகள் பயன்படுத்தப்பட்டது? 10 இரகசிய முகாம்களும், 25இற்கும் மேற்பட்ட தடைமுகாம்களும் பூசா, போஹம்பர, வெலிக்கட, 04ம் மாடி, 06ம் மாடி, மிகுந்தலை இராணுவ முகாம் போன்ற இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதிகளுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் விஷ ஊசி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 04ம் மாடியிலே விடுதலைப்புலிகளின் விஷேட தளபதிகள், புலனாய்வுத்துறை சம்பந்தபட்டவர்கள் எனத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் குறிப்பாக அடித்துத் துன்புறுத்தப்பட்டே விசா ரணை செய்யப்படுவார்கள். 06ம் மாடியில் 12 கம்பியறைகள் காணப்படுகின்றன. இவை ஒன்றினுடைய அளவு நீளம் 6 அடி, அகலம் 5 அடி என்ற அடிப்படையில் காணப்படும். ஒருவர் காலை நிமிர்த்தி நித்திரை செய்யமுடியும். இங்கு காலை உணவாக கடலை, நூடில்ஸ், ஒரு கப் பால் போன்றவையும் மதிய உணவாக மீன், சோயா, இறைச்சியும் இரவு உணவாக சோறு, நூடில்ஸ் கிடைக்கும். இங்கு ஒரு விடயம் என்னவெனில் கைதிகளுக்குக் கொடுக்கக்கூடிய உணவினையே அனை வரும் உண்பார்கள். அதுமட்டுமல்லாது அந்தக் கம்பிக்கூட்டிற்குள் உள்ளவர்கள் தாம் அணிந்திருக்கும் உடையினை மாத்திரமே வைத்திருக்கமுடியும். பிறிதொரு உடையினை வைத்திருக்க முடியாது. குளிப்பதாகவிருந்தால் நன்றாகக் குளிக்கலாம். குளியறை யில் இருந்து எட்டிப்பார்த்தால் கொழும்புத்துறைமுகத்தின் பின்புறம் நன்றாகத் தெரியும். இங்கு இருக்கக் கூடியவர்கள் பாரிய தாக்குதல்களையும், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தியவர்களும், விசேட புலனாய்வுத்துறை, உள்ளக புலனாய்வுத் துறை, விடுதலைப்புலிகளின் வேவு அணியினர், மில்டரி புலனாய்வு, நகரப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு தற்செயலாகக் கைதானக் கரும்புலிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களே இங்கு தங்கவைக்கப்படுவர். இதில் மிக முக்கியமானவர்கள் 04ம் மாடிக்கு மாற்றப்படுவார்கள். இன்னொரு வகையினர் பூசாவிற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அங்கு கிட்டத்தட்ட 2500 கைதிகளைத் தங்கவைக்கமுடியும். இங்கு பிரத்தி யேகமாக ஜேவிபியினருக்குக் கட்டப்பட்ட சிறைச்சாலைகள் இருக்கிறது. 32 அறை களும் நீளம் 06 அடி, அகலம் 04 அடி என்கிற அளவில் அமைந்திருக்கும். இங்கே யுபுளொக், டீபுளொக், ஊபுளொக் எனக் காணப்படும். இங்கு வழங்கும் உணவு வகைகள் சிறந்தவையல்ல. ஆனால் கடையில் வாங்கிச் சாப்பிடலாம். பணம் செலுத்தினால் கைதி ஒருவர் அனைவருக்கும் உணவுகள் வாங்கிவருவார். இங்குகூட அடித்து சித்திரவதைப்படுத்தியே விசாரணைகள் இடம்பெறும். இங்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் காலை இணைத்துக்கட்டி குதிக்காலில் தடியினால் 25இற்கு மேல் அடிப்பார்கள். அதுதவிர நெஞ்சிலே 10இற்கு மேற்பட்ட அடிகளும், இடுப்பிற்குக் கீழ் 20இற்கும் மேல் அடிப்பது வழமை. இதைவிட கட்டித்தொங்கவிடுதல், மிளகாய்த்தூள், பெற்றோல் கண்களுக்குப் பயன்படுத்தல், மின்சாரம் பாய்ச்சுதல், நகங்களைப் பிடுங்குதல், தலை யில் அடித்தல் இவ்வாறாக அடிக்கின்ற போது கைதிகள் இரத்தத்தை வாந்தியாக எடுக்கும் நிலை ஏற்;படுகிறது. பெரும்பாலும் இந்நிலையே சித்திரவதை முகாம்களில் இடம்பெறுகின்றது.

CRP(Colombo Remand Prison) என்று சொல்லப்படுகின்ற சிறைச்சாலை மகசின், பூசா, வெலிக்கட, போஹம்பர, பல்லேகல போன்ற சிறைச்சாலைகளில் அரசியல்கைதிகள் அல்லது சரணடைந்த போராளிகளைக் கைதுசெய்த பின்னர் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவர்களை இந்த சிறைச்சாலை வளாகம் பொறுப்பேற்கும். அதன்பிறகு விசேட உத்தரவின்பேரில் போராளிகளை விசாரணைக்காக அழைத்துச்செல்வர். விசேடமாக அழைத்துச்செல்லும் போரா ளிகள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள்.

மருத்துவர்களின் கருத்தின்படி, விசார ணைகள் என்ற போர்வையில் கைதிகளை அடிக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்கின்றனர்.

ஊசி பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள்
ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றும்போது அல்லது புதிதாக கைதுசெய்யப்படும்போது தலைமயிர் அகற்றல், அவர்களுக்கான பிரத்தியேக ஆடைகள் வழங்குதல், நோய்கள் ஏனையவர்களுக்குத் தொற்றாமல் இருப்பதற்காக ஊசியி னைப் பயன்படுத்துவார்கள். இது வழமையான விடயம். இச் சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஊசிகளைப் பயன்படுத்தமுடியும்.

கைதுசெய்யப்பட்ட 11000 முன்னாள் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டதா? அல்லது தெரிந்தெடுத்து ஏற்றப்பட்டிருக்கிறதா? அப்படியெனில் அது எங்குவைத்து ஏற்றப்பட்டது? எவ்வகையினைச் சேர்ந்தது? இதனைக் கூறுவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். இதனை சர்வதேசத்திடம் கூறுவதற்குத் தயாராகவிருக்கிறார்கள். விஷ ஊசி ஏற்றப்பட்டதை அல்லது தாக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்பதே சிறையின் நடைமுறை. வெலிக்கடயில் மாத்திரம் 1000 போராளிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். இதன்போது அவர்கள் பொலனறுவை, திருகோ ணமலை இரகசிய தடுப்புமுகாம், மிகுந்தலை, யோசப் முகாமிற்கும் அழைத்துவரப்பட்டனர். இவர்களின் நடவடிக்கைகளைக் கண்கானிப்பதற்காக, இராணுவத்தினரின் ஒட்டுக்குழுக்களாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளில் உள்ள ஒருசிலர் பயன்படுத்தப்பட்டார்கள். கருணா, பிள்ளையான் குழுவில் உள்ளவர்களும் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் பணி யில் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் அவர்களை சுட்டுக்கொலை செய்யுமாறு கருணா அவர்களே பணித்திருந்தார்.

இதேபோன்று தாண்டிக்குளம், மெனிக்பாம், ஏனைய தடுப்பு முகாம்களிலும் இராணுவத்திற்கு ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்ட இவ்வியக்கங்களின் ஒருசிலர் தலையாட்டிகளாகக்கூட செயற்பட்டனர். இராணுவக் கட்டுப்பாட்டில் இவ்வியக்கங்கள் இருந்தபோது இவ்வியக்கங்களில் உள்ளவர்கள் அப்போது விடுதலைப்புலிகளை எதிரி யாகவே பார்த்தனர். இவர்கள் முக்கிய தள பதிகள், போராளிகளின் பெற்றோர்களை வீதிவீதியாக அலையவைத்த சம்பவங்களும் மனதில் இன்றும் பதிந்திருக்கிறது.

சோதனைச் சாவடியிலிருந்தும், மெனிக்பாம் முகாமிலிருந்தும் காட்டிக் கொடுத்தவர்களின் விபரங்கள் ஆதாரங்களாகவிருக்கிறது. இவர்களுக்கு இராணுவத்தரப்பிடமிருந்து சம்பளம் வழங்கப்பட்டது. அவ்வாறு பணம் பெற்றவர்கள் பலர் இன்றும் சிறைகளில் இருக்கிறார்கள். குறிப்பாக கொலன்னாவ குண்டுத்தாக்குதல், மொரட்டுவ பேரூந்து தாக்குதல், மத்திய வங்கியின் குண்டுவெடிப்பு, ஜானக பெரேரா தற்கொலைத் தாக்குதல், சரத்பொன்சேகா, கோத்தபாய மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி போன்றவற்றோடு தொடர்புடையவர்களை இந்த ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தான் காட்டிக்கொடுத்தார்கள் என்பது உண்மையான வரலாறு.

ஆனால் இன்று விஷ ஊசி சம்பவத்திற்காக இவர்களும் இணைந்து கண்ணீர் வடிக்கின்றனர். அன்று காட்டிக்கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் இப்போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுத்திருக்கமாட்டார்கள். ஈழப்போரின் இறுதியில் பங்கெடுத்து தடைமுகாம்களிலிருந்து வெளியில் வந்த விடுதலைப்புலிகளின் முக்கியத் தளபதி ஒருவர் இச்சம்பவங்கள் குறித்து விபரிக்கையில்,
தொடரும்…

இரணியன்

SHARE