போராளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தப்பட்டிருந்தால் அது இனப்படுகொலையே

326

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதான விடயமானது சர்வதேச மற்றும் உள்ளூரில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராளிகளுக்கு விஷ ஊசி அல்லது உணவில் நின்றுகொள்ளும் விஷம் பயன் படுத்தப்பட்டுள்ளதாகப் பலராலும் கூறப்படும் கருத்தின் மூலம், இன்று ஒட்டுமொத்தப் போராளிகளுக்கும் அது மனோரீதியானத் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதா? எங்கிருந்து இந்த விஷ ஊசிகள் இறக்குமதி செய்யப்பட்டது? மருத்துவர்களின் மூலமாக இவை ஏற்றப்பட்டதா? குறிப்பாக எத்தனை போராளிகளுக்கு ஏற்றப்பட்டது என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்படவேண்டும். எந்தப் படைப்பிரிவினைச் சேர்ந்தவர்கள் இப்போராளிகளுக்கு விஷ ஊசி யினை ஏற்றினார்கள். இறந்த போராளி களின் மருத்துவ அறிக்கைகள் என்ன கூறுகின்றன. என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதன்பின்னரே முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்ற முடிவுக்கு வரலாம். கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விஷ ஊசி ஏற்றப்பட்டதை நிரூபிக்கும் வகையி லான ஆதாரங்கள் இல்லை.

ltte-20140430-1

குறிப்பாக த.தே.கூவின் பாராளுமன்ற, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் என இணைந்தால் கூட ஒருநபர் 100பேர் என்ற அடிப்படையில் 5000இற்கும் மேற்பட்டோரின் சாட்சியங்களை சமர்ப்பித்திருக்கமுடியும். வெறுமனே இனப்படுகொலை, பாலி யல் துஷ்பிரயோகம், விஷ ஊசி என அறிக்கைகளையே இவர்கள் சமர்ப்பித்துள்ளனர். பூநகரி, கிராஞ்சி போன்ற பகுதிகளில் பெண்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுவந்த சிறிதரன்(பா.உ) மீது அப்போதைய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்ததோடு பல்வேறான பொய்க்குற்றச்சாட்டுக்களையும் அவர்மீது சுமத்தியது. இவ்வாறு தமிழ் மக்களது பிரச்சினைகளை வெளிக்கொணர்;ந்தவர்களில் பலர் இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கென அழைக்கப்பட்டனர். மஹிந்தவின் காலத்தில் பலர் கடத்தப்பட்டனர். சாட்சியங்கள் வழங்கச் சென்றவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஒருசில தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்றபோது அரசினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். ஆகவே தமிழ் மக்களது பிரச்சினைகள் மிகவும் இரகசியமான முறையில் செயற்படுத்தப்படவேண்டும்.

syringe_14497301_M_0

ஐ.நாவுக்குச் சமர்ப்பிப்பதற்காக இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது விபரங்களைத்திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சன் மாஸ்ரர் (அலவ்பிள்ளை விஜேந்திரகுமார்) அரச புலனாய்வினரால் தேடப்பட்டு, பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளி யேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்கு பரீட்சயமானவர். இவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடவில்லை மாறாகத் தெரியாது என்று கூறிவிட்டனர். த.தே.கூட்டமைப்பினர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிவரும் என்ற காரணத்தால் அவரைத் தெரி யாது எனக்கூறிவிட்டனர். ஆகவே தமிழ் மக்களது பிரச்சினைகளைத் த.தே.கூட்டமைப்பு மறைமுகமாக சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லவேண்டுமே தவிர, இல்லையெனில் பிரச்சி னைகளுக்கானத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள இயலாது. எனவே தமிழ்ப் பிரதிநிதிகள் மிகவும் நிதானத்துடன் தமிழ் மக்களது பிரச்சினைகளைக் கையாளவேண்டும்.

 

SHARE