உறுப்பினர்கள் போதாமையினால் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு!

482
parliament

இலங்கை நாடாளுமன்றில் போதியளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வியாழக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் காரணத்தினால் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைத்துள்ளார்.

ஜூலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது.

எனினும் பின்னர் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால், அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்

 

SHARE