சனிக் கிரகத்தின் துணைக் கோளில் தரையிறங்க தயாராகும் ஸ்மார்ட் நீர் மூழ்கிக் கப்பல்!

260

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

சூரியக் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் நாசா நிறுவனம் பெரும் முனைப்பு காட்டி வருகின்றது.

சம காலத்தில் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ள அந் நிறுவனம் தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்படி சனிக் கிரகத்தின் துணைக் கோளான டைட்டனில் காணப்படும் சமுத்திரத்தில் தானியங்கி நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றினை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதன் ஊடாக டைட்டனில் காணப்படும் சமுத்திரம் தொடர்பான விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 1,429 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் டைட்டன் துணைக்கோளிற்கு அனுப்புவதற்கென 6 மீற்றர்கள் நீளமான ஸ்மார்ட் நீர்மூழ்கிக் கப்பலை அந் நிறுவனம் வடிவமைக்க தீர்மானித்துள்ளது.

தவிர இந்த கப்பல் 1,200 கிலோ கிராம்கள் எடை உடையதாகவும் காணப்படும்.

குறித்த ஸ்மார்ட் நீர் மூழ்கிக் கப்பலை நிலை நிறுத்துவதற்கு ஏதுவான நிலைமைகள் தற்போது ஆராயப்பட்டள்ளதுடன், மீண்டும் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

எனினும் இத் திட்டமானது முழுமையடைந்ததன் பின்னர் 2038ம் ஆண்டிலே தான் ஸமார்ட் நீர் மூழ்கிக் கப்பல் டைட்னிற்கு செலுத்தப்படவுள்ளது.

SHARE