பார்வையற்றவர்களுக்கு உதவும் கருவி! சாதனை படைத்த மாணவன்

276

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் டெல்லி பாபு என்பவர் கண் பார்வையற்றவர்களுக்கு கண் போல இருந்து பயன்படக் கூடிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் வளர்ச்சிக் கழகம் இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியை நடத்தியது.

அந்த கண் காட்சியின் போது மாணவர் டெல்லி பாபு கண் பார்வையற்றவர்களுக்கு கண் போல இருந்து பயன்படக்கூடிய கருவியை கண்டுபிடித்து இருந்தார்.

டெல்லி பாபு அவரின் கண்டுபிடிப்பை பற்றி கூறியதாவது, கண்பார்வையற்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கும். இது நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டு இருந்தது.

அப்போது தான் இரவில் கண்ணு தெரியாத வவ்வால் தன் வாயில் இருந்து மீயொலி எழுப்பி, அது எதிரில் இருக்கும் பொருட்கள் மீது பட்டு எதிரொலித்து வரும் அளவைப் பொறுத்து தான் செல்லும் பாதையை தீர்மானிக்கும்.

இந்த யோசனை அடிப்படையாக கொண்டு பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் கருவியை உருவாக்க வேண்டும் என்று அதற்கான தகவல்களைத் தேடத் தொடங்கினேன்.

இந்த கருவியில் டிரான்சிஸ்ட்டர்கள், பேட்டரி மற்றும் சென்சார் கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கினேன்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

மேலும் இக்கருவி பார்வையற்றவர்கள் கொண்டு செல்லும் ஸ்டிக்கில் பொருத்தினால் அவர்கள் நடந்து செல்லும்போது எதிரில் பள்ளம், தூண் போன்ற தடைகள் இருந்தால் 2 அடி தூரத்துக்கு முன்பே இந்தக் கருவி ஒலி எழுப்பும்.இதன் மூலம் இந்தக் கருவி கண்பார்வை இல்லாதவர்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக அமையும்.

மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தி வடிவமைத்தால், இன்னும் அதிக பயனுள்ள கருவியாக கொண்டு வரமுடியும்.

எப்போதும் மனித சமூகத்திற்குப் பயனுள்ள கருவியை உருவாக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

SHARE