லிப்ட்டை பயன்படுத்தும் பெண்களே, இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க..

458

wading01

லிப்ட்டில் செல்லும் இளம்பெண்ணின் கைப்பையை திருடன் பறித்துக் கொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் லிப்ட்டை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தால் லிப்ட் பயன்பாட்டை தவிர்க்க முடியாது.

அலுவலகங்களிலும் லிப்ட்டை பயன்படுத்த வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். லிப்ட்டில் பெண்கள் தனியாக செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. லிப்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவின் விபரம், இளம்பெண் ஒருவர் கைப்பையுடன் லிப்ட்டில் தனியாக செல்கிறார். ஒரு தளத்தில் ஏறிய நபர் அந்த பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு அவரையும் வெளியே தள்ளிவிட்டார்.

பின்னர் அடுத்த தளத்தில் எதுவும் தெரியாதது போன்று வெளியே சென்றுவிட்டார். தனியாக செல்லும் பெண்கள் சூதானமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE