கமல் வெளியிடும் சிகரம் தொடு!

455

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவர், தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்தார். இப்போது தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடிக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது
SHARE