ஆகஸ்ட்டில் அதர்வாவின் இரும்புக்குதிரை!

467

பரதேசி படத்தைத் தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் – இரும்புக்குதிரை. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் யுவராஜ் போஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்! இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இரும்புக்குதிரை படத்தின் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது இப்படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டநிலையில், படத்தின் போஸ்ட் புரொட்கஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இரும்புக்குதிரை படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆடியோ வெளியான சில தினங்களிலேயே அதாவது விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 29-ஆம் திகதியே படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். அதர்வா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பரதேசி. அந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார் அதர்வா. பரதேசி படத்தில் நடித்த கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக படு மாடர்னான இளைஞனாக இரும்புக்குதிரை படத்தில் நடித்திருக்கிறாராம் அதர்வா. இப்படத்தில் அதர்வாவின் நடிப்பு கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் இயக்குநர். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா தயாரிப்பில் சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அதர்வா.

 

Tags »
SHARE