ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடித்தால் இடம் கிடைக்காது: டாப்ஸியின் அனுபவம்

417

ஆடுகளம் படத்தில் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு இந்த டாப்ஸி பன்னு. பெரிய ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடித்ததை விட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். ஆரம்பம் படத்திற்கு பிறகு தற்போது வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். ஏன் இப்படி என்று கேட்டால் இப்படி பதில் சொல்கிறார்.
சோலோ ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு பிடிவாதமா இருந்தால் இங்கு பெருசா இடம் கிடைக்காது. பத்து நிமிட கேரக்டர்ல சாதிச்சவங்க இருக்காங்க. நல்ல கம்பெனி, நல்ல கதை கூட நடிக்கிறவங்க சரியா இருந்தால் ரொம்ப சின்ன கேரக்டர்லகூட நடிக்கலாம். நடிப்புங்றது ஒரு தொழில், அதுல எங்கெல்லாம் நல்ல சான்ஸ் கிடைக்குதோ அதை யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான். அப்படித்தான் நடிப்பேன், இப்படித்தான் நடிப்பேன்னு சொல்றதுக்கு என்ன இருக்கு. முனி-3யில் ஹீரோயினா நடிக்கிறேன். ரன்னிங்சாதி டாட் காம்ங்ற இந்திப் படத்துல நடிக்கிறேன். அவை வெற்றி பெறும்போது சோலோ ஹீரோயின் சான்ஸ் தானா தேடிவரப்போகுது என்கிறார் டாப்ஸி.
SHARE