iPhone 7 பக்கிங் படங்கள் வெளியாகின

249

இம் மாதம் iPhone 7 எனும் புதிய கைப்பேசியினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான தகவல்களை வெளியிடும் செய்தியாளர்கள் மாநாடு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது iPhone 7 பக்கிங் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்காக முன்னரே புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இப்புதிய கைப்பேசியின் வடிவத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 3.5 மில்லி மீற்றர் ஓடியோ ஜக், லைட்னிங் போர்ட் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய பதிப்புக்களாக வெளியாகவுள்ள இக் கைப்பேசியில் A10 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் தலா 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கைப்பேசியானது அப்பிள் புதிதாக அறிமுகம் செய்துள்ள iOS 10 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இக் கைப்பேசிகளின் விலைகள் மற்றும் ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE