இன்றைய காலகட்டத்தில் இருப்பது போன்ற சூழல் நீடித்தால் 2050ம் ஆண்டுக்குள் பாதி உயிரினங்களே இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சூழலியல் நிபுணராக ரீஸ் ஹால்டர் என்பவர் கூறுகையில், பூமியை மனிதர்கள் மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.
இந்த நிலை நீடித்தால் இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமியே ஒரு பாறை போன்று மாறிவிடும்.
இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும்.
இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
காலநிலைகளில் கண்டிப்பாக மாற்றங்கள் இருக்கும், இதற்கு காரணம் அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றுவது தான்.
கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம்.
இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும்.
அதாவது பூமியில் பாதி உயிரினங்களே இருக்காது, இதை சரிசெய்ய நாம் இயற்கையை காப்பாற்ற வேண்டும். இயற்கையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.