20-வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற 69 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
நேற்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்களும், பெண்களுக்கான ஜூடோ போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. ஓம்கார் ஒட்டாரி வென்ற வெண்கலப் பதக்கத்தை சேர்த்து இந்தியா இதுவரை 17 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது.
16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்ளை வென்ற இங்கிலாந்து பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.