அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் விமானங்களில் சம்சங் கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்சங் கேலக்சி நோட் 7 மொபைல் போன்களின் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான மொபைல் போன்களை சீனா திரும்ப பெற்றது.
இந்த விவகாரத்தால் 2 தினங்களுக்கு முன்பு இந்த வகை சம்சங் போன்களை விமானங்களில் பயன்படுத்த அவுஸ்திரேலியா தடை விதித்தது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் விமானங்களில் கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கூறியுள்ளதாவது, கேலக்சி நோட் 7 போன்களின் பேட்டரி தீப்பிடிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த வகை போன்களை விமானங்களில் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை ஆன் செய்து வைத்தோ அல்லது அதனை விமான பயணத்தின் போது பயன்படுத்தவோ கூடாது என தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து துறை இயக்குனர் பி.எஸ்.புல்லர் தெரிவித்துள்ளார்.