லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்

476
கடந்த 2011ஆம் ஆண்டில் லிபியாவின் சர்வாதிகாரி முயம்மார் கடாபி பதவி இறக்கப்பட்டபின் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால அரசின் துணை பிரதமராக முஸ்தபா அபு ஷகோர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அமைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்திலும் அவர் ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். இவரை நேற்று ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதனை மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான எஸ்சாம் அல் நஸ்சே உறுதி செய்துள்ளார்.

நேற்று மதியம் அண்டலுஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் ஷகோர் இருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அவரை வீட்டைவிட்டு உடனே வெளியேறுமாறு மிரட்டியுள்ளான். ஆனால், அதன்படி செய்ய அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று அவரை அருகில் நிறுத்தியிருந்த கார் ஒன்றில் ஏற்றி கடத்திச் சென்றுவிட்டனர். இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யாரென்று உடனடியாகத் தெரியவில்லை.

SHARE