யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்-ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து

605

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கடந்த 25ம் திகதி கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்சி செய்தமை, வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கஜதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

SHARE