நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலும், இதற்காக அரசமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக ஆராயவும் முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாபதி மகிந்த ராஜபக்சவே இந்த குழுவை நியமித்துள்ளதாக தெரியவருகின்றது.
அரசமைப்பின் 17 திருத்தத்தை மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்துவது மற்றும் தேர்தல் முறையில் மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த குழு ஆராயவுள்ளது.
இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தன்னிடம் இந்த பணியை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.
தான் இது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்த பின்னர் அதனை புத்திஜீவிகளிடம் சமாப்பித்து அவர்களது கருத்தை பெற உள்ளதாகவும் ஊவா தேர்தலிற்கு பின்னர் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க உளளதாகவும் கடந்த வாரம் ஜனாதிபதி சரத் என் சில்வாவை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.