இனி அப்பிள் சிறி ஊடாக வாட்ஸ் அப் செய்தி அனுப்பலாம். புதிய பதிவேற்றத்தில் அதிரடி வசதி

250

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

இன்னும் ஓரிரு தினங்களில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை சந்தைக்கு விடுகின்றது அப்பிள் நிறுவனம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் iOS 10 எனும் புதிய இயங்குதளப் பதிப்பை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

அத்துடன் நின்றுவிடாது நேற்றைய தினம் குறித்த இயங்குதளத்திற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்களிற்கான பதிவேற்றத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில் சிறி (Siri) அப்பிளிக்கேஷனில் சில புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ள நிலையில் இதன் ஊடாக இனி வாட்ஸ் அப் செய்தி அனுப்ப முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர மல்டிபிள் சட் வசதி, லாக் ஸ்கிரீன் ஊடாக வாட்ஸ் அப் அழைப்புக்களை ஏற்றுக்கொள்ளல், வாசிக்கப்படாத மெசேஜ்களை விரைவாக பார்வையிடுவதற்குரிய விட்ஜட், உட்பட மேலும் சில வசதிகள் சிறி 2.16.10 பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை iOS 10 இயங்குதளத்திற்கான வாட்ஸ் அப் அப்பிளிக்கேஷனையும் iTunes தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

SHARE