சீலாமுனை இளைஞர் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

278

court-rules-e1444231072605

மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியில் சாரதி ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமமை மட்டக்களப்பு நகரின் பார் வீதியை அண்டியுள்ள ஆனந்தா ஒழுங்கையில் ஒரு பிள்ளையின் தந்தையான சோமசிறி விஜித் ஜெயந்த என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொலை இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவநாதன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

SHARE