சாம்சுங் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்திருந்த Galaxy Note 7 கைப்பேசி அந்நிறுவனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
சார்ஜ் செய்யும்போது அவற்றின் மின்கலங்கள் வெடித்து சிதறியமையே பிரதான காரணம் ஆகும்.
இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 2.5 மில்லியன் கைப்பேசிகளை அந்நிறுவனம் மீளப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி சாம்சுங் நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவில் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்காவிலும் இந் செயன்முறை மேற்கெள்ளப்படவுள்ளது. மேலும் ஏனைய நாடுகளில் இம் மாத இறுதியில் மீள் விற்பனை இடம்பெறவுள்ளது.
இத்தகவலை சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.